ஜோட்டா- ஜோட்டி | JOTA - JOTI

   உலகின் மிகப்பெரிய சாரணர், சாரணியர் (Scouts and Guides) நிகழ்வான ஜோட்டா-     ஜோட்டி (JOTA-JOTI) இந்நிகழ்வு உலகம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.     இதில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

JOTA என்றால் என்ன?
JAMBOREE ON THE AIR - JOTA என அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒர் அனைத்து நாடுகள் நிகழ்சியாகும்.
JOTI என்றால் என்ன?
JAMBOREE ON THE INTERNET - JOTI
இணையத்தில் நடைபெறும் நிகழ்வாகும்.
இது உலகெங்கிலும் உள்ள சாரணர், சாரணியர்களுக்காக (Scouts and Guides) நடத்தப்படும் ஒரு கல்வி சார்ந்த நிகழ்வாகும். தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், உலகளாவிய குடியுரிமையின் மதிப்புகள் பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ளவதற்காக World Organization of the Scout Movement (WOSM) என்ற உலக நாடுகள் அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் உள்ள சாரணர், சாரணியர்கள் ஒருங்கினைவார்கள். அமெச்சூர் வானொலி (Ameteur Radio - HAM) மூலம் சாரணர்கள் தொடர்புகொள்ளும் முறையையும் கற்பார்கள்.
நான் எப்படி ஒரு சாரணராகப் பங்கேற்க முடியும்?
உங்கள் உள்ளூர் சாரணர் சபையைத் தொடர்புகொண்டு, உங்கள் பகுதியில் ஏற்கனவே என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கவும். நீங்கள் உள்ளூர் HAM ரேடியோ ஆபரேட்டர் அல்லது உள்ளூர் அமெச்சூர் ரேடியோ கிளப்பையும் தொடர்பு கொள்ளலாம். கிளப்களின் தேடக்கூடிய தரவுத்தளத்தை பின்வரும் தொடர்பில் காணலாம்
ஒரு அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டராக நான் எவ்வாறு பங்கேற்க முடியும்?
உங்கள் உள்ளூர் சாரணர் குழுவைத் தொடர்புகொண்டு, உங்கள் பகுதியில் ஏற்கனவே என்ன திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதைப் பார்க்கவும். இந்த நிகழ்வில் பல்வேறு சாரணர், சாரணியர் அமைப்புகளால் சர்வதேச பங்கேற்புகளில் ஒன்றாக அங்கீகரித்துப் பங்கேற்றதற்கானச் சான்றிதலும் வழங்கப்படுகிறது.
இது வழக்கமாக அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு, JOTA - JOTI அக்டோபர் 20, 21,22 தேதிகளில் நடைபெற உள்ளது. 21ஆம் தேதி கீழ்கண்ட இடங்களில் நடைபெறும். 22 ஆம் தேதி இணைவழியில் நடைபெறும். 170 இக்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளில் இருந்து 20 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாள் : 21-19-2023
நேரம் : 10AM - 3PM
நடைபெறும் இடங்கள்:
1. Bharathi Matriculation School, Indian. Bank Colony,Trichy -21
VU3UGG, VU3UGR, VU3UGM
2. Bishop Heber Higher Secondary School, Theppakulam, Trichy.
VU3WIW, VU3DGH, VU3WIU
3. District Scout Training center –Kattur , Trichy.
VU3FEU, VU3OKL, VU2DRI,
4. Govt.Higher secondary school - Musiri VU3UGN, VU3JXL ,
5. Govt Higher secondary school - Lalgudi VU3LHS,VU3UGO, VU3XVM
6. Govt Higher secondary school - Thotium.
VU3WIY, VU3SVM,
7. Thyageshwar Aalai Higher Secondary. School - Manaparai
VU3WIV, VU3LHN, VU3XIF
- Bala Bharathi (VU3UGG)
May be an image of text that says 'jota 20 Ûti23 Jamboree 净58·089 The Bharath Scouts & Guides WELCOMES 21sl October 2023 JOTA -2023 Bharathi Matriculation School, Indian Bank Colony, Trichy- 21. AU3JOTA Rockfort Amateur Radio Members LONE WORLD Amaleuf Pudo ONE ANGUNGE'
All reactions:
Manonmani Pudhuezuthu, Jeevithakannan Puranar and 11 others

Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....