தோடர்களின் வில்

 

பழங்குடி மக்களான தோடர்களின் மந்துக்குச் சென்றிருந்தபோது அவர்களின் வில்லைப்பற்றி கேட்டறிந்தோம். அவர்கள் பயன்படுத்தும் வில்லை ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்துதான் செய்வார்களாம். இம்மரத்தை 'வில்லுமரம்' என்றே அழைக்கின்றனர். தற்போது வேட்டை தடைச் செய்யப்பட்டிருப்பதால் பாரம்பரியத்திற்காக மட்டும் செய்து வைத்துக்கொள்கிறார்களாம்.
பழங்காலத்திலிருந்தே வில் ஒரு முக்கிய ஆயுதமாக வேட்டையிலும், போர்களத்திலும் இருந்துள்ளது.
மேல்பழைய கற்காலத்திற்கும் இடை கற்காலத்திற்கும் இடையில்தான் வில்லும் அம்பும் தோன்றியுள்ளன. வில், அம்பை எய்வதற்குப் பயன்படுகிறது.
துப்பாக்கிககளின் வரவிற்கு முன்புவரை அவ்விடத்தை வில் பிடித்திருந்தது. இவை மரத்திலிருந்து செய்யப்பட்டன.
நவீன வில்கள் பல்லடுக்கு மரம், கண்ணாடி இழை, உலோகங்கள், கரிம நார் போன்ற மூலபொருட்களால் ஆக்கபடுகின்றன. முழுவதுமாக ஒரே மரத்தைக் கொண்டு தயாரித்த வில் 'ஒருமரவில்' எனப்படுகிறது.
- பாலா பாரதி

Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

மாவளியோ...மாவளி....