மாவளியோ...மாவளி....
- Get link
- X
- Other Apps
கார்த்திகை திருநாள் வாழ்த்துகள் ...
'மாவளி’ சுற்றுதல் கார்த்திகைத் தீபநாளில் நடைத்தப்படும் விளையாட்டாகும். பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி பொட்டலமாகக் துணியில் கட்டி வைத்துக்கொள்வார்கள். இப்பொட்டலத்தை பனைஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதை நீண்ட கயிற்றில் கட்டிவைத்துக்கொண்டு நெருப்பை வைத்து விடுவார்கள். இப்போது கயிற்றைப் பிடித்து வேகமாக சுற்றுவார்கள். அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு சுற்றுவதற்குத் தகுந்தவாறு பல உருவங்களை ஏற்படுத்தும்.(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)
அப்போது "மாவளியோ மாவளி" என்று சத்தமிடுவார்கள். இது பார்ப்பதற்கு ஒரு இனிய காட்சியாக இருக்கும். மா ஒளி = பெரிய ஒளி என்பது மருவி மாவளி ஆகியிருக்க வேண்டும்.
அண்மையில் வெளிவந்த 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' திரைப்படத்தில்
கதாநாயகன் தினேஷ் மாவளிச் சுற்றிக்கொண்டு
"மாவளியோ...மாவளி...."
எப்பாடும் பாடல் இடம்பெற்றுள்ளது.
இவ்வழக்கம் நீண்டகாலமாக வழக்கில் இருப்பதை, இக்காட்சி பாறைஓவியத்தில் காணப்படுவதிலிருந்து அறிந்துகொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி சுற்றும் காட்சியைக் காணலாம்.
(நன்றி:திரு.சுகவன முருகன்).
All reactions:
45Bala Murali, Ashok Renu and 43 others- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment