ஊர்பெயர் அறிவோம்: பெட்டவாய்த்தலை

 திருச்சியிலிருந்து கரூர் செல்லும்போது பெட்டவாய்த்தலை என்னும் ஊரைக் கடந்துத்தான் செல்வோம்.

அது என்ன "பெட்டவாய்த்தலை?"
ஆற்றிலிருந்து கால்வாய் பிரியும் இடத்திற்கு வாய்த்தலை என்று பெயர் (வாய்+தலை=வாய்த்தலை). இதை வாத்தலை என மக்கள் அழைப்பர். வாத்தலை என்ற பெயரில் ஊர்கள் உள்ளது.
காவிரியிலிருந்து உய்யக்கொண்டான் வாய்க்கால் பிரியும் இடம் இங்குதான் உள்ளது. பிரியுமிடத்து பாறைகள் இருந்தமையால் அப்பாறைகளை வெட்டி இந்த வாய்த்தலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வூர் "வெட்டுவாய்த்தலை" என்ற பெயரைப்பெற்று "வெட்டுவாத்தலை" என மக்களால் அழைக்கப்பட்டுள்ளது.
பின்னர் இப்பெயர் பெட்டவாய்த்தலையாக மாறிவிட்டது. மேலும், சிலர் இதை அதன் பெயருக்கு சற்றும் பொருத்தமில்லாமல் பேட்டைவாய்த்தலை என எழுதுகிறார்கள். இவ்வூரை
வெட்டுவாந்தலை என மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
- பாலா பாரதி
ஊர்பெயர் அறிவோம்: குளித்தலை
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் குளித்தலை என்னும் ஊர் உள்ளது.
அது என்ன "குளித்தலை?"
தண்டலை என்றால் சோலை என்று பொருள். காவிரிக்கரையின் தென்புறத்தில் குழிவானப் பகுதியில் உள்ள சோலை அதாவது தண்டலை குழி+தண்டலை=குழித்தண்டலை என அழைக்கப்பட்டது. இப்பெயர் குளித்தலை என பொருளறியாமல் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பதினோராம் திருமுறையில் (சேத்திரத்தல வெண்பா)
"கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு"
என இவ்வூரிலுள்ள கடம்பர் கோயிலில் எழுந்தருளும் கடம்பேஸ்வரைப் பாடுகிறார்.
திரு.வி.க அவர்கள் குளிர்+தண்டலை=குளிர்தண்டலை எனக்கூறுவார்.

- பாலா பாதி

Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....