வேங்கை

 "பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை

நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்."
- பழமொழி
விளக்கம்: வேங்கை தானே முன்னர்ப் பலநாள் இருப்பினும் பூத்தல் இல்லை. பூத்தற்குரிய காலம் வந்ததும் பூக்கும் இயல்பையுடையது. கணியும், வேங்கையும் பொதுப்பெயர்களாயினும் சிறப்புப் பெயரும் பொதுப்பெயருமாய் நின்று வேங்கை மரம் என்பதை உணர்த்தின. இஃது இருபெயரொட்டு. நன்னாள் என்றது மணநாளை. மணநாளில் வேங்கை மலர்தல் இயல்பு. கணி என்பது, காலத்தைக் கணித்தலின் காலங்கணிக்க வல்லார்க்கும், வேங்கையும் மணநாட்களைக் கணித்தலின் வேங்கைக்கும் ஆயின. 'மன்னர் உவப்ப வழிபட்டு ஒழுகினும்' என்பது வேண்டிய செல்வத்தை அரசர்கள் கொடுக்கும் நிலையிலிருப்பினும் என்பதாம். வேங்கை பூக்குங்காலமாகிய மணநாளறிந்து பூத்தல்போலச் செல்வமும் வருங்காலமறிந்தே வரும்.
'செல்வம் தொகற்பால போழ்தே தொகும்' என்பது பழமொழி.
ஒருவனிடம் செல்வம், வருங்காலமறிந்தே வரும்.

எம்பள்ளியில் வேங்கையும் பூத்ததே சித்திரை நன்னாளில்..


Comments

Popular posts from this blog

தோடர்களின் எருமைகள்

தோடர்களின் வில்

மாவளியோ...மாவளி....