மேற்கு தொடர்ச்சி மலையை அறிவோம்
மேற்கு தொடர்ச்சி மலை தழிழ்நாட்டில் கண்யாகுமரி மாவட்டத்தில் ஆரம்பித்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை சங்கிலித்தொடர் போல் 1600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. இந்த மலைத்தொடர், அரபிக்கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து தென்மாநிலங்களுக்கு நல்ல மழையைத் தருகிறது, வெப்ப காலத்தில் அதிகம் வெப்பம் தாக்காதவாறும், குளிர்காலத்தில் அதிக குளிர் தாக்காதவாறும் தென்னிந்தியாவின் பருவகால நிலையை பாதுகாக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையானது இமயமலையைவிட பழமையானது. உலகின் வன வளங்கள் மிகுந்த 32 இடங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் 50 அணைக்கட்டுகள், 126 ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட சர்வதேச கோடைவாழிடங்கள், பழநி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோயில்கள் , ஆண்டு முழுவதும் மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னைய...