திருச்சியில் நீர்நாய்கள்... (The Smooth Indian Otter)

சனிக்கிழமை இரவு நண்பர் சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘சார் நாளக்கி பேர்ட் வாட்சிங் போலாமா?' என்றுக் கேட்டவரிடம் சரியென உடனே ஒப்புக்கொண்டதற்கு வேறொரு காரணமும் இருந்தது, பறவைகளைப் படம்பிடிப்பதற்காக NICKON P900 கேமரா அன்றுதான் வாங்கியிருந்தேன். கேமராவுடன் பறவைகள் கையேடு, பைனாகுலர், குறிப்பேடுகளுடன் மறுநாள் காலை 5.30 மணிக்குக் கிளம்பிவிட்டேன். சிவாவுடன் நண்பர் இராஜகோபாலும் வந்திருந்தார், அவர் புகைப்படக்கலைஞர் எனவே நமக்கு புகைப்படமெடுப்பதற்குக் கற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். மூவரும் திருச்சி ஆட்சியாளர் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலின் வழியே பயணம் செய்து பறவைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தோம். புறவைகளை கூண்டில் பார்க்காமல் அதன் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது மகிழ்வானது. மயில், புறா, செம்போத்து, புல்புல், ஆள்காட்டி, தேன்சிட்டு, கானாங்கோழி, பனங்காடை, மீன்கொத்தி, குயில், முதலிய பறவைகளை அங்குப் பார்க்க முடிந்தது. கால்வாயின் மேலேயுள்ள பாலத்தில் நடந்துகொண்டிருந்தபோது… “ஆட்டர், ஆட்டர்” என்று இராஜகோபால் சார் கத்...